போகம்பரைச் சிறையில் தப்பியோட முயற்சித்த கைதிகள்! ஒருவர் சுட்டு கொலை!

போகம்பரைச் சிறையில் தப்பியோட முயற்சித்த கைதிகள்! ஒருவர் சுட்டு கொலை!

கண்டி போகம்பரை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்வதற்கு முற்பட்ட கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மூன்று கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவர் தப்பியோடியுள்ளார்.

போகம்பரைச் சிறைச்சாலையில் இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. இங்குள்ள ஐந்து கைதிகள் தப்பிச் செல்ல முற்பட்ட போதே இச்சம்பவம் இடம்பெற்றது.

கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் செல்ல முற்பட்டனர். ஐந்து பேர் தப்பிச் செல்ல முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் மீது பாதுகாப்புத் தரபபினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் கொல்லப்பட்டார். மூவர் கைது செய்யப்பட்ட மற்றொருவர் தப்பிச் சென்றுள்ளார்

administrator

Related Articles