போட்டியை வென்றது அவுஸ்திரேலியா! ஆனால் இதயத்தை வென்றதோ இந்தியா!

போட்டியை   வென்றது அவுஸ்திரேலியா! ஆனால்   இதயத்தை வென்றதோ இந்தியா!

சிட்னியில் இன்று நடைப்பெற்ற இந்திய அணிக்கெதிரான இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 51 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதன்படி மூன்று போட்டிகளை கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா தொடரை வென்று விட்டது.

IPL போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் முறையாக போட்டிக்கு தங்களை தயார்ப்படுத்தி கொள்ளாதன் காரணமாகவே இந்த தொடர் தோல்வியை நோக்கி சென்றது என விளையாட்டு விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இந்த தோல்வி ஒரு புறம் இருக்க போட்டியை பார்க்க வந்த ரசிகரொருவர் தனது காதலியிடம் திருமணத்திற்கான விருப்பத்தை தெரிவிக்கும் வீடியோ அனைவரையும் நெகிழ செய்தது.

அவுஸ்திரேலியா போட்டியில் வென்றாலும் இதயத்தை இந்தியா வென்றது என்பதை இந்த சம்பவம் காட்டி விட்டது.

சரி இனி ஸ்கோர் விபரத்திற்கு வருவோம். நாண சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ஓட்டங்களை பெற்றது.

இதில் அணித்தலைவர் பின்ஞ் தனது சக ஆட்டக்காரரான டேவிட் வார்னருடன் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 142 ஓட்டங்களை பெற்று கொடுத்து அணியை ஸ்தரமான இடத்திற்கு கொண்டு வந்தார்.

அவருக்கு பிறகு வந்த ஸ்மித் போடுற பந்துக்கு கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் அடிச்ச அடிகள் இந்திய அணிக்கு அதிர்ச்சி வந்திருக்கும்.

அவர் 64 பந்துகளுக்கு 14 பவுண்டரிகளோடு 2 சிக்ஸர்களோடு 104 ஓட்டங்களை பெற்றார். இவர் மாத்திரமா எங்கையோ போன மாடு நம்மல வந்து முட்டின மாதிரி மெக்ஸ்வல் 29 பந்துகளுக்கு 4 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களோடு 63 ஓட்டங்களை எடுத்து அணியின் ஓட்டங்களை 389 ஓட்டங்கள் வரைக்கும் கொண்டு வந்தார்.

பதிலுக்கு ஆடிய இந்திய அணி கொரோனாவுக்கு பயந்தவங்க போல ஆரம்பத்தில் இருந்தே களத்திற்கு வந்து கொஞ்ச நேரம் பேட்டை பிடிச்சு கெட்சை கொடுத்து போனாங்க.

அணித்தலைவர் கோலி மாத்திரம் சிறப்பாக ஆடினார். ஆனாவ் IPL ல் ஆடின மாதிரி அதிரடியாக ஆடாமல் ஆமைப்போல 87 பந்துகளுக்கு 89 ஓட்டங்களை எடுத்தார்.

அவர் கொஞ்சம் வேகமாக விளையாடி இருந்தால் போட்டி திசை மாறி இருக்கும். ராகுல் தனது பங்குக்கு 76 ஓட்டங்களை பெற்றார். இந்தியா தனது 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ஓட்டங்களை மட்டுமே பெற்றது

கடைசியில் அவுஸ்திரேலியா அணி 51ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

administrator

Related Articles