மகளிருக்கான ஒற்றையர் டெனிஸ் செம்பியன் நயோமி ஒசாக்கா!

மகளிருக்கான ஒற்றையர் டெனிஸ்  செம்பியன் நயோமி ஒசாக்கா!

தற்போது நடைப்பெற்று வரும் அமெரிக்க பகிரங்க டெனிஸ் போட்டியின் மகளிருக்கான ஒற்றையர் செம்பியன் ஷிப் டெனிஸ் போட்டியில் 22 வயதான ஜப்பானிய வீராங்கனை நயோமி ஒசாக்கா வெற்ளியீட்டினார்.

இன்று 12 ஆம் திகதி நியோர்க் நகரில்  அமெரிக்க பகிரங்க டெனிஸ் போட்டியின் மகளிருக்கான ஒற்றையர் இறுதி போட்டி இடம்பெற்றது.

கொவிட் 19 நோய்   காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களே கலந்து கொண்ட இந்த போட்டியில்  ஜப்பானிய கிராம் ஸ்லாம் வீரங்கனையான நயோமி ஒசாக்கா மற்றுமொரு கிராம் ஸ்லாம் வீரங்கனையான  பெலராஸ் நாட்டை சேர்ந்த விக்டோரியா அசரங்காவோடு மோதினார்.

இந்த போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. குறிப்பாக அரை இறுதி போட்டியில் ஷெரினா வில்லியம்ஸை தூக்கி வீசிய விக்டோரியா இம்முறை அமெரிக்க பகிரங்க கிண்ணத்தை சுவிகரிப்பார் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இளம் வீராங்கனையான நயோமி ஒசாக்க திறமை சேர்வ் பண்ண கூடியவர் . தனது கையில் உள்ள டெனிஸ் பந்தை முடிந்தளவு உயிரம் வீசி பின்னர் தனது ரெக்ட்டினால் வேகமாக அடிக்க கூடியவர்.

அவர் இதனை சாதகமாக பயன்படுத்தி விக்டோரியாவை 1-6 , 6-3, 6 – 3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
குறிப்பாக முதல் செட்டில் நயோமி தோற்றதும் ஆட்டம் வேகமாக முடிய போகுது என பலர் எண்ணி இருந்தார்கள்.

ஆனால் பின்னர் புயலாக அவர் ஆடிய ஆட்டத்தை உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் ரசித்தார்கள்.

இந்த போட்டி மூலம் செம்பியன்ஷிப் வென்ற நயோமி ஒசாக்கா ” மீண்டும் ஒரு இறுதி போட்டியில் விக்டோரியாவுடன் மோத விரும்பவில்லை ” என்று நகைச்சுவையாக சொன்னார்.

அவருடன் போட்டியிடுவது கடினமானது ஆனாலும் உங்களோடு விளையாடியது எனது பாக்கியம் ” என அவர் தனது வெற்றி உரையில் மேலும் கூறினார்.

இந்த போட்டியின் மூலம் ஓசாக்காவிற்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர்களும் கின்னமும் கிடைத்தது.

அவருடன் போட்டியிட்ட  விக்டோரியாவிற்கு கேடயமும் 1.5  மில்லியன் அமெரிக்க டொலர்களும் அளிக்கப்பட்டது.

administrator

Related Articles