மக்கள் விடுதலை முன்னணியின் மகளிர் தினம்

மக்கள் விடுதலை முன்னணியின் மகளிர் தினம்

“சுதந்திரமான பெண் சுதந்திரமான சமூகம்”, என்னும் பொருளின் கீழ் மக்கள் விடுதலை முன்னணியின் மகளிர் அமைப்பான சோஷலிச மகளிர் சங்கம் நேற்று (21) 110 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் கொண்டாடியது.

அந்நிகழ்வில் சோஷலிச மகளிர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் தோழி சமன்மலி குணசிங்கா மற்றும் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் தலைவி தோழி சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

அதேபோன்று பெண்கள் அமைப்புகளுக்கான நிதியமும் பெண்கள் அமைப்புகளுக்குக் கையளிக்கப்பட்டது.

அதில் வட்டுக்கோட்டை மூளாய் பிரதேச சோஷலிச மகளிர் சங்கம் மற்றும் மிருசுவில் கிழக்கு சோஷலிச மகளிர் சங்கக் கிளை அமைப்புகளுக்கு யாழ் மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளர் தோழர் சந்திரசேகர் அவர்களால் கையளிக்கப்பட்டது.

அதேபோன்று கலாசார நிகழ்வுகளாக நடன நிகழ்ச்சியும் சிறுபிள்ளைகளின் கவிதைகளும் வாசிக்கப்பட்டது.

இறுதியாக இசை ரசனை நிகழ்வு இடம்பெற்றது அந்நிகழ்வை யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சாமிநாதன் விமல் தொகுத்து வழங்கினார்.

நிகழ்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கியவர் தோழி ஆரணி மிகச் சிறப்பாக வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்திரளான பெண்கள் கலந்துக்கொண்டமை சிறப்பம்சமாகும்.

ReplyForward

administrator

Related Articles