அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான மக்குவாரி தீவில் கடல் பாதுகாப்புப் பகுதி விஸ்தரிக்கப்படவுள்ளது.

அதன் பரப்பளவு 475,465 சதுர கிலோமீட்டருக்கு அதிகரிக்கப்படவுள்ளது. இது ஒரு நாட்டின் அளவைவிட மிகப் பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியாக அமையவுள்ளது.

அதாவது, அவுஸ்திரேலியாவின் புதிய கடல் பாதுகாப்புப் பகுதி, வியட்நாம் மற்றும் ஜப்பான் ஆகியவற்றை விடப் பெரியதாகவும் ஸ்பெயினுக்கு ஈடான அளவில் பெரிதாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அத்துடன், இந்தப் பாதுகாப்புப் பகுதியில் மீன்பிடிப்பு மற்றும் சுரங்க நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மக்குவாரி தீவு, அவுஸ்திரேலியாவிற்கும் அண்டார்ட்டிக்காவிற்கும் இடையே உள்ளது. அங்கு மில்லியன்கணக்கான பெங்குயின், நீர்நாய்கள் மற்றும் கடல் பறவைகள் வாழ்கின்றன.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *