மட்டக்களப்பு – அம்பாறையில் வெடித்திருக்கும் போதைப்பொருள் வியாபாரம்!! அடுத்தடுத்து கைதுகள்!! முதலையை தேடி பொலிஸ் வலை வீச்சு

மட்டக்களப்பு – அம்பாறையில் வெடித்திருக்கும் போதைப்பொருள் வியாபாரம்!! அடுத்தடுத்து கைதுகள்!! முதலையை தேடி பொலிஸ் வலை வீச்சு

  எஸ்.எம்.எம்.முர்ஷித்   

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை மாலை ஹொரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸாருடன் இணைந்து நாவலடி இராணுவ சோதனை சாவடியில் வைத்து கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த பேருந்தில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது 5020 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் காத்தான்குடியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே நாவலடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் வாழைச்சேனை இராணுவ புலனாய்வுப் பிரிவினர், வாழைச்சேனை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் விஷேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பிரதேசத்தில் போதை வியாபாரத்தையும், பாவனையையும் இல்லாதொழிக்கும் நோக்கில் இராணுவப் புலனாய்வு பிரிவினர், விஷேட அதிரடிப்படையினர், பொலிஸார் மேற்கொண்டு வரும் செயற்பாட்டுக்கு மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்

அத்தோடு இந்த போதைப்பொருள் விற்பனையின் முதலை அதாவது விநியோகஸ்தர் யார் என்பது குறித்து பொலிஸார் இரகசிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

administrator

Related Articles