மன்னாரில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த வயோதிபர் யானை தாக்கி பலி (படங்கள்)

மன்னாரில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த வயோதிபர் யானை தாக்கி பலி (படங்கள்)

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி மேய்ச்சல் தரவை பகுதியில் இன்று (12) மதியம் மடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பலியாகியுள்ளார்.

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பலியானவர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நருவிலிக்குளம் கிராமத்தைச்  சேர்ந்த என்.எம்.ஆபிரகாம் (வயது-69) என தெரிய வந்துள்ளது.

தேத்தாவாடி மேய்ச்சல் தரவை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் மூவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது திடீர் என அப்பகுதிக்கு வந்த யானை குறித்த மூவரையும் துரத்தியுள்ளது.

இதன் போது இருவர் தப்பிச் சென்ற நிலையில் குறித்த வயோதிபர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இலுப்பைக்கடவை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டதோடு,மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

மேலதிக விசாரனைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

administrator

Related Articles