ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை இலங்கை அரசு ஒப்புக்கொண்டு நீண்ட காலங்களாகியும் அவற்றை உரியவாறு நடைமுறைப்படுத்தவில்லை.
எனவே உண்மையைக் கண்டறிதல் நீதி மற்றும் பொறுப்புக் கூறல் விடயங்களில் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதுடன் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று மன்னார் மாவட்ட சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
வியாழக்கிழமை (21) காலை 10 மணித் தொடக்கம் 11 மணி வரை மன்னார் மாவட்ட செயலகத்தின் முன்பாக அமைதியான ஜனநாயக வழிமுறையில் நடைபெற்றது.
இதில் ஆண் பெண் மற்றும் மதத் தலைவர்கள் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது ஐ.நா.பொதுச் செயலாளர் மற்றும் ஐ.நா.பொதுச்சபையின் உறுப்பினர்களுக்கு ஒரு வெளிப்படையான முறையீடாகவும்
இலங்கை போர்க் குற்றங்களை விசாரிக்க ஐ.நா.சர்வதேச நீத்ப் பொறிமுறையை உறுதி செய்தல் வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
(வாஸ் கூஞ்ஞ)