மலையக ரயில் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தடை

மலையக ரயில் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தடை

நாவலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் எஜ்ஜின் ஒன்று தடம் புரண்டதால் மலையக ரயில் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கண்டியில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த ரயிலின் எஞ்சின் இன்று மதியம் 12.30 அளவில் தடம்புரண்டதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் பதுளை முதல் கண்டி வரை சேவையில் ஈடுபடும் ரயிலின் பயணம் மற்றும் கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் ரயில் ​சேவைகள் நாவலப்பிட்டி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ரயில் எஜ்ஜினை தண்டவாளத்தில் நிறுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரயில் போக்குவரத்தை இன்று மாலை வழமைக்கு கொண்டுவர முடியும் என நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

administrator

Related Articles