“மல்லியப்பு” தோட்டத்தில் இருவருக்கு கொரோனா! சாமிமலையிலும் ஒருவருக்கு தொற்று!

“மல்லியப்பு” தோட்டத்தில் இருவருக்கு கொரோனா! சாமிமலையிலும் ஒருவருக்கு தொற்று!

மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரி பிரிவுக்குட்பட்ட  பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சாமிமலை, மல்லியப்பு தோட்டத்தில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  46 வயதுடைய பெண்ணொருவருக்கும், 50 வயதுடைய ஆணொருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

கொழும்பிலிருந்து இவர்களின் வீட்டுக்கு வந்திருந்த பெண்ணொருவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. அம்முடிவுகளின் அடிப்படையிலேயே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சாமிமலை பெயர்லோன் தோட்டத்தில்  54 வயதுடைய பெண்ணொருவருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.  இவர்கள் மூவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

administrator

Related Articles