மஸ்கெலியாவில் 15 மாணவிகளுக்கு குளவி கொட்டு (படங்கள்)

மஸ்கெலியாவில் 15 மாணவிகளுக்கு குளவி கொட்டு (படங்கள்)

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்மோர் தமிழ்வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவியர் இன்று மதியம் 3.30 மணிக்கு பாடசாலை விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த வேலையில் புரக்மோர் பகுதியில் வைத்து குளவி கொட்டுக்கு 15 பேர் இலக்காகி மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 4 மாணவ மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதாரவைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக வைத்திய அதிகாரி பாகிமா தெரிவித்தார்.

(மஸ்கெலியா நிருபர் – செ.தி.பெருமாள்)

administrator

Related Articles