மஹர சிறைச்சாலைக்குள் தீ ,மோதல், துப்பாக்கி பிரயோகம்!நால்வர் பலி ! 24 பேர் காயம்! ( video)

மஹர சிறைச்சாலைக்குள் தீ ,மோதல், துப்பாக்கி பிரயோகம்!நால்வர் பலி ! 24 பேர் காயம்! ( video)

இன்றைய தினம் மஹர சிறைச்சாலைமில் சில கைதிகள் தப்பிக்க முற்படட போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறினார்கள்.

பின்னர் சிறைச்சாலைக்குள் தீ விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து துப்பாக்கி பிரயோக சத்தம் கேட்டதாக சிறைச்சாலைக்கு அன்மையில் வாழும் மக்கள் கூறியுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் தீ பரவியுள்ள நிலையிலேயே, துப்பாக்கி சூட்டு சத்தங்கள் தொடர்ந்தும் கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹர சிறைச்சாலையிலிருந்து தமது வைத்தியசாலைக்கு 4 சடலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளரை மேற்கோள்காட்டி அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது.

24 கைதிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறி இருக்கிறார்.

கொரோனா நோயாளிகள் சிறைச்சாலையில் இருப்பதனால் சில கைதிகள் தப்பிக்க நினைத்தாகவும் இதனால் ஏற்பட்ட பின்விளைவுகளே இதற்கு காரணமாக இருக்கலாம் என சிறைச்சாலை வட்டாரங்கள் கூறுகின்றன.

administrator

Related Articles