மாகண சபை முறை நீக்கப்பட்டு மாவட்ட சபைகள் உருவாக்கப்பட வேண்டும்! உலமா கட்சி கோரிக்கை.

மாகண சபை முறை நீக்கப்பட்டு மாவட்ட சபைகள் உருவாக்கப்பட வேண்டும்! உலமா கட்சி கோரிக்கை.

மாகாண‌ ச‌பை முறை நீக்க‌ப்ப‌ட்டு மாவ‌ட்ட‌ ச‌பைக‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டு அத‌ற்கு தேர்த‌ல் ரீதியில் உறுப்பின‌ர்க‌ள் தெரிவு செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌தே உல‌மா க‌ட்சியின் நீண்ட‌ கால‌ கோரிக்கையாகும் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, 

க‌ட‌ந்த‌ அர‌சாங்க‌ கால‌த்தில் மாகாண‌ ச‌பைக‌ளின் ஆயுட்கால‌ம் முடிவுற்று ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் சென்றும் அந்த‌ ஆட்சியின‌ர் மாகாண‌ ச‌பை தேர்த‌லை ந‌ட‌த்த‌வில்லை. அத‌ற்கு வ‌க்கில்லாம‌ல் போன‌வ‌ர்க‌ள் இப்போது மாகாண‌ ச‌பை தேர்த‌லை ந‌ட‌த்த‌ சொல்வ‌து வேடிக்கையான‌து.

 ஆனாலும் இந்த‌ நாட்டின் வ‌ர‌லாற்றில் கிழ‌க்கு மாகாண‌ ச‌பை தேர்த‌லை அன்றைய‌ ஜ‌னாதிப‌தி ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வே முத‌லில் ந‌ட‌த்திக்காட்டினார். அதே போல் வ‌ட‌ மாகாண‌ ச‌பை தேர்த‌லிலும் த‌ம‌து க‌ட்சி தோற்கும் என்று தெரிந்தும் அத‌னை  ந‌ட‌த்திய‌வ‌ர் ம‌ஹிந்த‌வே. அந்த தேர்த‌ல் ந‌ட‌க்காம‌ல் விட்டிருந்தால் விக்னேஷ்வ‌ர‌ன் என்ற‌ ஒருவ‌ரை அர‌சிய‌ல் உல‌க‌ம் க‌ண்டிருக்காது.

மாகாண‌ ச‌பைக‌ள் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து இன‌ங்க‌ளுக்கிடையில் அதிகார‌த்தை ப‌கிர்ந்த‌ளித்து இன‌ ஒற்றுமையை ஏற்ப‌டுத்த‌வே. ஆனால் மாகாண‌ ச‌பைக‌ள் இன‌வாத‌த்தையே விதைத்து விட்டுள்ள‌ன‌.

த‌மிழ‌ர் ஒருவ‌ர் முத‌ல‌மைச்ச‌ரா அல்ல‌து த‌மிழை பேசும் முஸ்லிம் முத‌ல‌மைச்ச‌ரா என்ற‌ உஷார் ப‌டுத்த‌லை த‌மிழ் க‌ட்சிகளும், முஸ்லிம் க‌ட்சிக‌ளும் செய்து இன‌முர‌ண்பாடுக‌ளை ஏற்ப‌டுத்தின‌ர். 

அதே போல் 70 வீத‌ம் த‌மிழ் பேசும் ம‌க்க‌ளைக்கொண்ட‌ கிழ‌க்கு மாகாண‌ ச‌பைக்கு ஒரு முஸ்லிம் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ போது அவ‌ருக்கெதிராக‌ த‌மிழ் ம‌க்க‌ளை தூண்டி விட்ட‌தை க‌ண்டுள்ளோம்.

அது ம‌ட்டும‌ல்ல‌, மாகாண‌ ச‌பைக‌ள் மூல‌ம் ம‌க்க‌ள் ந‌ல‌ன் பெற்ற‌தைவிட‌ அத‌ன் உறுப்பின‌ர்க‌ளே ந‌ன்மை அடைந்த‌ன‌ர். 

ஆக‌வே மாகாண‌ ச‌பைக‌ள் இருக்கும் ப‌ட்ச‌த்தில் அவ‌ற்றுக்கு தேர்த‌ல் ந‌ட‌த்தாம‌ல் இருப்ப‌து ஜ‌ன‌நாய‌க‌மாகாது. அவ்வாறு தேர்த‌ல் ந‌ட‌த்த‌ முடியாது எனும் போது மாகாண‌ ச‌பைக‌ளை முற்றாக‌ க‌லைத்து அத‌ன் நிர்வாக‌ங்க‌ள் அனைத்தும் ம‌த்திய‌ அரசாங்க‌த்துக்கு கொண்டு வ‌ர‌ப்ப‌ட்டு, மாவ‌ட்ட‌ ச‌பை முறை கொண்டுவ‌ர‌ப்ப‌ட்டு அத‌ற்கு தேர்த‌ல் மூல‌ம் அதிகார‌ங்க‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌தை ப‌ல‌ கால‌மாக‌ உல‌மா க‌ட்சி சொல்லி வ‌ருகிற‌து.

இத‌ன் மூல‌ம் அந்த‌ந்த‌ மாவ‌ட்ட‌ ம‌க்க‌ளுக்குரிய‌ சேவை மிக‌ இல‌குவாக‌ கிடைப்ப‌துட‌ன் முர‌ண்பாடுக‌ளையும் நீக்க‌ முடியும்.

administrator

Related Articles