மாகாண சபை தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்

மாகாண சபை தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து நேற்று (28) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்று ஆளும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என அமைச்சர் எஸ்.எம்.சந்ரசேன தெரிவித்துள்ளார்.

நேற்றைய கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆளும் தரப்புக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கலந்துக்கொண்டமை குறிப்பிடதக்கது..

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய செயற்குழு கூட்டம் நாளை கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசியல் நிலைமை, கட்சியின் மறு சீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து நாளை முக்கிய அவதானம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சகடதி உருவாக்கவுள்ள கூட்டணியின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆயிரம் பேர் அடங்;கிய விசேட குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

administrator

Related Articles