விஷால் – எஸ். ஜே சூர்யா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி .

இந்தப்படத்தின் ஹிந்தி பதிப்பிற்காக தாம் மத்திய திரைப்பட தணிக்கை குழுவிற்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக நடிகர் விஷால் வெளிப்படையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.

அதில் தமது சினிமா வாழ்க்கையில் இவ்வாறான நிலை தமக்கு ஏற்பட்டது இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து இதற்கு இந்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சு தமது பதிலை டூவிட்டர் X தளத்தில் கூறி இருக்கிறது. அதில்

“ஊழலை அரசு சகித்துக்கொள்ளாது”
மார்க் ஆண்டனி இந்தி பதிப்பிற்கு தணிக்கை சான்றிதழ் பெற லஞ்சம் தர வேண்டியிருந்தது என்ற விஷாலில் குற்றச்சாட்டுக்கு இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பதில்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *