மாஸ்டர் பட தெலுங்கு டீசர் வெளியீடு

மாஸ்டர் பட தெலுங்கு டீசர் வெளியீடு

மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் இணையதளத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தீபாவளிக்கு வெளியிடததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், மாஸ்டர் திரைப்படத்தை பல மொழிகளில் ஒரே நாளில் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீசரை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, தமிழ் ட்ரைலர் ஆங்கில புத்தாண்டு அன்று வெளியிடபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

administrator

Related Articles