மியன்மார் வன்முறைகளில் 38 பேர் பலி

மியன்மார் வன்முறைகளில் 38 பேர் பலி

மியன்மாரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 38 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.


மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.


இந்த தாக்குதல் சம்பவத்தை மியன்மார் எதிரான ஐக்கிய நாடுகள் பிரதிநிதி கிறிஸ்டின் ஸ்கேனர் வன்மையாக கண்டித்துள்ளார்.


மியன்மாரின் கடந்த ஒரு மாத காலமாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மியன்மார் படையினர் கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மியன்மார் படையினர் இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles