மீண்டும் கோப் குழுவில் ஆஜராகுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு அழைப்பு

மீண்டும் கோப் குழுவில் ஆஜராகுமாறு  ஸ்ரீலங்கா  கிரிக்கெட்டுக்கு அழைப்பு

எதிர்வரும் 06 ஆம் திகதி மீண்டும் கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த மாதம் 11 ஆம் திகதி ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் கோப் குழு முன்னிலையில் ஆஜரானது.

இதன்போது கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் உரிய தயார்ப்படுத்தலுடன் வருகைதராத காரணத்தால் கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டு மீண்டும் ஒரு மாதத்தில் குறித்த குழு முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அடுத்த மாதம் 06 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையிலான கோப் குழு, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏழு அரசாங்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

administrator

Related Articles