முடியலடா சாமி

முடியலடா சாமி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் சென்சூரியனில் இடம்பெற்று வரும் முதல் டெஸ்டில் தென்னாபிரிக்கா அணி தமது முதல் இனிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 621 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதற்கமைய தென்னாபிரிக்க அணி 225 ஓட்டங்களால் போட்டியில் முன்னிலை பெற்றுள்ளது.

தென்னாபிரிக்காவின் முதல் இனிங்ஸ் துடுப்பாட்டத்தில் பெப் டூ பிளசிஸ் 199 ஓட்டங்களையும் டீன் எல்கர் 95 ஓட்டங்களையும் பெற்று இமாலய ஓட்ட குவிப்புக்கு வித்திட்டனர்.

இலங்கையின் பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 171 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இலங்கையணி முதல் இனிங்சில் 396 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடதக்கது.

தென்னாபிரிக்காவுக்கு தமது இரண்டாவது இனிங்சில் பதிலளிக்கும் இலங்கை சற்று முன்னர் வரை 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 55 ஓட்டங்களை பெற்றுள்ளது.

administrator

Related Articles