முதலாம் திகதி சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?

முதலாம் திகதி சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினைக்கு இதுவரையில் காத்திரமான ஓர் தீர்வு கிடைக்கவில்லை, இந்த நிலையில் எதிர்வரும் 1ம் திகதி சம்பள நிர்ணயசபை மீளவும் கூட உள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் இன்னும் இழுபறி நிலையிலேயே இருந்துவருகின்றது. 2021 ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் கைக்கூடவில்லை.

இந்நிலையில் சம்பள நிர்ணய சபை மார்ச் முதலாம் திகதி கொழும்பில் கூடவுள்ளது. இதன்போது சம்பள உயர்வு சாத்தியப்படும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிட்டாலும், கம்பனிகளின் மௌனம் தொடர்கின்றது.

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்துவருகின்றனர். எனினும், அடிப்படை நாட் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக்குவதற்கு கம்பனிகள் எதிர்ப்பை வெளியிட்டுவந்தன.

இதனால் 2020 மார்ச் முதல் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா இருக்க வேண்டும் என ஜனாதிபதி கட்டளையிட்டார். அந்த கட்டளைக்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

கம்பனிகள் இவ்வாறு இழுத்தடித்ததாலேயே சம்பள உயர்வு விவகாரம் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளது. அங்கு மூன்று சுற்று பேச்சுகள் நடைபெற்றிருந்தாலும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

அதேவேளை, சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் கூட்டு ஒப்பந்தம் ஊடாக தொழிலாளர்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகள் இல்லாமல்போகக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

administrator

Related Articles