முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது ! மே.தீவுகள் அணியை சதமடித்து காப்பாற்றிய போனர்!

முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது ! மே.தீவுகள் அணியை சதமடித்து காப்பாற்றிய போனர்!

இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணிகளுகிடையில் சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் இன்று முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது.

வெற்றி இலக்கான 375 ஓட்டங்களை பெறும் நோக்கில் ஆடுக்களம் நுழைந்த மே.தீவுகள் அணி ஆடுக்களத்தின் தன்மையை உணர்ந்து நிதானமாக ஆடியது.

குறிப்பாக இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் வீசிய இலகுவான பந்துக்களை மட்டுமே பதம் பார்த்தனர்

ஐந்தாம் நாளான இன்று மதிய போஜன இடைவேளை வரை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்தது.

குறிப்பாக இளம் வீரரான நிக்ரூமா போனர் நிதானமாக ஆடியதை பாரட்ட வேண்டும் .அவர் நேற்று மாலை முதல் இன்று வரை ஆடி 274 பந்துகளை எதிர்நோக்கி ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களை எடுத்தார். ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரரகவும் அவர் தெரிவானார்.

அதேபோன்று அணியின் மற்றுமொரு இளம் வீரரான கயல் மேயர்ஸ் சக வீரரான போனருடன் இணைந்து இலங்கை அணியின் வெற்றியை தடுத்தனர்.

கயல் மேயர்ஸ் இரண்டாவது இன்னிங்ஸிலும் நிதானமாக ஆடி 52 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் திறமையாக பந்து வீசியதை சுட்டிக்காட்ட வேண்டும். எவ்வாறாயினும் மே.தீவுகள் அணியின் துடுப்பாட்டம் முன்னிலையில் இருந்தது.

ஸ்கோர் விபரம்

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 169 ஓட்டங்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 476 ஓட்டங்கள்

மே.தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 271 இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களை பெற்றது. ( போனர் ஆ.இ 113 , கயல் மேயர்ஸ் 52 பந்து வீச்சில் விஸ்வ பெர்ணான்டோ 74/2 லசித் எம்புல்தெனிய 62/2 )

administrator

Related Articles