முதியவர்களுக்கு அஸ்ட்ராசென்கா தடுப்பூசி வழங்குவதில் சிக்கல்

முதியவர்களுக்கு அஸ்ட்ராசென்கா தடுப்பூசி வழங்குவதில் சிக்கல்


65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசென்கா கொவிட் தடுப்பூசி வழங்குவதில் சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தடுப்பூசி தொடர்பிலான தேசிய நிபுணர் குழுவொன்றினால் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலும் இந்த தடுப்பூசியை வயது முதிர்ந்தவர்களுக்கு வழங்கப்படக்கூடாது என அறிவித்திருந்தன. பின்னர் இந்த அறிவிப்பினை சில நாடுகள் வாபஸ் பெற்றுக் கொண்டதுடன் முதியவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது.

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசென்கா தடுப்பூசி வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் எவ்வாறு தொழிற்படும் என்பது பற்றிய போதியளவு தகவல்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான ஓர் பின்னணியில் குறித்த தடுப்பூசியை முதியவர்களுக்கு வழங்குவது பொருத்தமாகாது என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

administrator

Related Articles