முல்லைதீவில் கார் விபத்து!! அதிக வேகமா? தூக்கமா ? பொலிஸார் விசாரணை

முல்லைதீவில் கார் விபத்து!! அதிக வேகமா? தூக்கமா ? பொலிஸார் விசாரணை

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் ஒன்று நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் வேக கட்டுப்பாட்டினை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது: வேகமாக சென்ற கார் தேராவில் வளைவில் திருப்பமுடியாத நிலையில் காணி ஒன்றுக்குள் பாய்ந்து மின்கம்பத்தினை உடைத்துத்தள்ளி பனைமர கன்று ஒன்றினை மோதி சல்லடையாகியுள்ளது.

குறித்த காரில் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளபோதும் தெய்வாதீனமாக காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பியுள்ளார்கள்.

குறித்த விபத்தின் போது கார் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் விபத்து குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அதிக வேகமா அல்லது நள்ளரவு காரணமாக சாரதி தூக்க கலக்கத்தில் இருந்தாரா என்பது குறித்தும் பொலிஸார் ஆராய்கின்றனர்.

administrator

Related Articles