சிறுவர்களுக்கு கசிப்பு பருக்கிய கொடூர கும்பல்; சிறுவர்கள் வைத்தியசாலையில் (VIDEO)

சிறுவர்களுக்கு கசிப்பு பருக்கிய கொடூர கும்பல்; சிறுவர்கள் வைத்தியசாலையில்  (VIDEO)

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிப்பு பகுதியில் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்படட நிலையில் சிறுவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (28) இரண்டு சிறுவர்களும் சுயநினைவு அற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வலுக்கடடாயமாக சிறுவர்களுக்கு கசிப்பு பருக்கியமை தொடர்பாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் இரண்டு சிறுவர்களுடைய பெற்றோராலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடையதாக 8 பேர் உள்ளனர் என பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். அந்நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என சிறுவர்களின் பெற்றோர்கள் கோரியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் தொகையில் அரைவாசிக்கு அதிகமாக இராணுவமும் பொலிஸாரும் உள்ள நிலையில், அவர்கள் மாவீரர் நாள் உட்பட நினைவேந்தல்கள் போன்ற தமிழ் மக்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க துடிக்கின்றனரே தவிர தமது கடமைகளான சட்டவிரோத செயல்கள், இயற்கை அழிவுகளை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதோடு அதற்கு துணைபோய்வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது.

இதேவேளை சிறுவர்களுக்கு கசிப்பு பருக்கியமை தொடர்பில் பொலிஸாரின் விதிசாரணையில் சம்பவதினத்தன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று (29) நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 3ம் திகதிவரை மறியலில் வைக்கப்பட்டுள்ளார் ஏனைய நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

நன்றி உதயன்

administrator

Related Articles