மெல்பேர்ன் புயலை சாதுரியமாக சந்திக்கும் இந்தியா

மெல்பேர்ன் புயலை சாதுரியமாக சந்திக்கும் இந்தியா

மெல்பேர்ன் டெஸ்டில் அற்புதமாக பந்து வீசி அவுஸ்திரேலியாவை 195 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திய பந்து வீச்சாளர்களை இந்திய அணித் தலைவர் விராட் கோலி பாராட்டியுள்ளார்.

தற்போது இரண்டாவது டெஸ்டில் இருந்து விடைபெற்ற இந்தியா திரும்பியுள்ள கோலி தனது டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்பேனில் இன்று ஆரம்பமாகியது.

முன்னதாக நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியாவை 195 ஓட்டங்களுக்குள் இந்திய பந்து வீச்சாளர்கள் பிடுங்கி எறிந்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் முதல் இனிங்சில் லபுசென் மாத்திரம் 48 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இந்திய அணியின் பந்து வீச்சில் பும்ரா 4 விக்கெட்டுக்களையும் ரவிசந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், மொஹமட் சிராஜ் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து சகல விக்கெட்டுக்களையும் வீழ்த்திய திருப்தியில் தனது முதல் இனிங்சை ஆரம்பித்த இந்திய அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் மயங் அகர்வால் முட்டையுடன் மிச்செல் ஜோன்சனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதற்கமைய இந்திய அணி 159 ஓட்டங்கள் பின்னிலையுடன் நாளையும் பதிலளிக்கவுள்ளது.

administrator

Related Articles