மைத்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மைத்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஈஸ்டர் ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தாக்குதல் சம்பவத்தை தடுக்க உரிய நடவடி;ககை எடுக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழுவின் அறிக்கை இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபருக்கு இந்த ஆணைக்குழு குறித்த பரிந்துரைகளை செய்துள்ளது.

administrator

Related Articles