மொனராகலையில் விபத்து: வயோதிப பெண் பலி, இருவர் காயம்

மொனராகலையில் விபத்து: வயோதிப பெண் பலி, இருவர் காயம்

(எமது செய்தியாலளர் நடராஜா மலர்வேந்தன்)

மொனராகலை மூன்றாம் கட்டை தொலம்பவத்த பகுதியில் இன்று (22) முற்பகல் லொறியொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த வயோதிப பெண் பலி, முச்சக்கர வண்டி சாரதி உட்பட மேலும் இருவர் காயங்களுடன் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பசறை பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பசறை − 13ம் கட்டை பகுதியில் 14 பேரின் உயிரை காவுக்கொண்ட பஸ் விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் தூரத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

-நடராஜா மலர்வேந்தன்-

administrator

Related Articles