மொரட்டுவையில் கோர விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட இருவர் பலி!கர்ப்பிணியான தாயின் நிலைமை மோசம்!

மொரட்டுவையில் கோர விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட இருவர் பலி!கர்ப்பிணியான தாயின் நிலைமை மோசம்!

மொரட்டுவ பகுதியில் புதிய காலி வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் அவர்களின் தாயான கர்ப்பிணி பெண்ணும் படுகாயமடைந்துள்ளார்.

இவர்கள் பாதையை கடக்க முற்பட்டவேளை, வேகமாக வந்த மோட்டார் சைக்கிளொன்று அவர்கள்மீது மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஒன்று மற்றும் 7  வயதுடைய சிறுமிகளே உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் பானந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றார்.

இரவு வேளையில் நாளாந்தம் குறித்த பகுதியில் இளைஞர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

பிரதான வீதியில் அதி வலுக் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் சிலர் நாளாந்தம் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதாகவும், இது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர். 

administrator

Related Articles