மோசடி செய்த குற்றசாட்டுக்காக முன்னாள் நிதி அமைச்சருக்கு 8 வருட சிறைத்தண்டனை!!

மோசடி செய்த குற்றசாட்டுக்காக  முன்னாள்  நிதி அமைச்சருக்கு 8 வருட சிறைத்தண்டனை!!

கடந்த மூன்று வருடங்களாக ஐரோப்பிய செய்தியாளர்களுக்கு சத்தான செய்திகளை வழங்கிய அவுஸ்திரியாவின் முன்னாள் நிதியமைச்சரான கார்ல் ஹின்ஸ் கிராஸருக்கு இன்று வியானா நீதிமன்றம் எட்டு வருட சிறை தண்டனையை விதித்துள்ளது .

பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிப்படுவான் என்பதை போல இவர் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிய லஞ்சத்தை விட ஒரேடியாக செட்டில் ஆகலாம் என்ற நோக்கில் 2004. ஆம் ஆண்டு (” சுனாமி வந்த வருஷம்” ) இந்த நிதியமைச்சர் அரசாங்கத்திற்கு சொந்தமான அபார்ட்மன்டுகளை விற்பனை செய்யும் டென்டரை அவருக்கு நெருங்கிய சகாவிற்கு பெற உதவி செய்துள்ளார்.

இதற்காக அவர் பெற்ற பணம் தான் சர்ச்சையாகி பின்னர் வழக்காகி இன்று கம்பி எண்ணும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த தீர்ப்பு வழங்கிய கொஞ்ச நேரத்தில் அவரது செல்வந்த மனைவியான பியானோ ஸ்வராவோஸ்கி தனது 125. வருட பழைமை வாய்ந்த அதாவது 1895 ஆண்டு உருவாக்கப்பட்ட உலக புகழ் பெற்ற ஸ்வராவோஸ்கி ஆணிகாரம் விற்பனை மற்றும் பெக்டரிகளில் பணிப்புரிந்த 6 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை விடுப்பு வழங்கி உள்ளார்.

அத்துடன் தமது 3 ஆயிரம் விற்பனை நிலையங்களை அவர் மூடி உள்ளார். இந்த வழக்கில் முக்கியமாக பியனோவின் வயோதிப தாய் அவரையும் இந்த மோசடி வழக்கில் இழுத்து இருக்கிறார்கள்.

அதில் உங்கள் நிறுவன கணக்கில் எவ்வறு 5 லட்சம் ஈரோக்கள் மாயமாக வந்தது என விசாரனை குழு கேட்டு இருக்கின்றது.

இவ்வாறாக பல சர்ச்சைகள் காரணமாக இவர் தமது 3 ஆயிரம் விற்பனை நிலையங்களை மூடி இருக்கிறார்.

பியோனாவிற்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் நான்கு வெவ்வேறு திருமணங்கள் ஊடாக இவர்கள் பிறந்தார்கள் என மெயில் ஆன் லைன் கூறுகிறத.

இரண்டாம் உலக போருக்கு பின்னால் அவுஸ்திரியாவில் இடம்பெற்ற உச்ச மோசடி வழக்காக இது பார்க்கப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு கிராஸியருக்கு எதிரான விசாரனைகள் இரகசியமாக ஆரம்பிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

administrator

Related Articles