யாழில் JVPயின் “சுதந்திரமான பெண் சமூகம்”

யாழில் JVPயின் “சுதந்திரமான பெண் சமூகம்”

“சுதந்திரமான பெண் சுதந்திரமான சமூகம்”.
என்னும் பொருளின் கீழ்  மகக்ள் விடுதலை முன்னணியின் மகளிர் அமைப்பான சோஷலிச மகளிர் சங்கம் 110 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை இன்று (21.மார்ச் 2021) யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடியது.

அந்நிகழ்வில் சோஷலிச மகளிர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் தோழி சமன்மலி குணசிங்கா.மற்றும் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் தலைவி  சரோஜா சாவித்திரி போல்ராஜ் உப்பட பலர்  கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

அதேபோன்று பெண்கள் அமைப்புகளுக்கான நிதியமும் இன்று பெண்கள் அமைப்புகளுக்குக் கையளிக்கப்பட்டது.

அதில் வட்டுக்கோட்டை மூளாய் பிரதேச சோஷலிச மகளிர் சங்கம் மற்றும் மிருசுவில் கிழக்கு சோஷலிச மகளிர் சங்கக் கிளை அமைப்புகளுக்கு யாழ் மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளர்  சந்திரசேகர் அவர்களால் கையளிக்கப்பட்டது. .

மத

அதேபோன்று கலாசார நிகழ்வுகளாக நடன நிகழ்ச்சியும் சிறுபிள்ளைகளின் கவிதைகளும் வாசிக்கப்பட்டது. .இறுதியாக இசை ரசனை நிகழ்வு இடம்பெற்றது அதில் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சாமிநாதன் விமல் அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கியவர் தோழி ஆரணி மிகச் சிறப்பாக வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்திரளான பெண்கள் கலந்துக்கொண்டமை சிறப்பம்சமாகும்.

administrator

Related Articles