யாழ் கரப்பந்தாட்ட லீக் சுற்றுப்போட்டி ஆரம்பம்!!

யாழ் கரப்பந்தாட்ட லீக் சுற்றுப்போட்டி ஆரம்பம்!!

யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் இடம்பெறும் யாழ் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று (21) காலை ஆரம்பமாகியது.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமாநாதன் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டார்.

யாழ் மாவட்டத்தில் கரப்பந்தாட்டத்தை முன்னேற்றத்துக்கு அழைத்துச்செல்லும் வகையில், முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ள ஜப்னா வொலிபோல் லீக் (Jaffna Volleyball League) இந்த போட்டி தொடரானது இன்று 20ஆம் திகதி ஆரம்பமாகியது, இந்த முதல் நாள் போட்டியில் சங்கானை மக்களொன்றிய சேலஞ்சர்ஸ் மற்றும் நீர்வை பசங்க அணிகள் முதல் போட்டியில் மோதவுள்ளன.

ஒரு நாளில் மொத்தமாக 4 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், லீக் போட்டிகள் ஏப்ரல் 11ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றன. லீக் போட்டிகள் நிறைவடைந்த பின்னர், குவாலிபையர், எளிமினேட்டர் போட்டிகள் ஏப்ரல் 16ம், 17ம் திகதிகளில் நடைபெறவுள்ளன. முதல் குவாலிபையர் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவுசெய்யப்படும் என்பதுடன், எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணி, முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வியடைந்த அணியுடன் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் விளையாடி, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியும்.

எலிமினேட்டர் போட்டி ஏப்ரல் 18ஆம் திகதி நடைபெறும் என்பதுடன், தொடரின் இறுதிப் போட்டி ஏப்ரல் 24ஆம் திகதி மாலை 4 மணிக்கு இடம்பெறும். குவாலிபையர், எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டிகள் புத்தூர் ஆவரங்கால் மைதானத்தில் நடைபெவுள்ளன.

அதேவேளை ஏனைய போட்டிகள் அரியாலை சரஸ்வதி சனசமூக மையம், ஆவரங்கால் மைத்திய விளையாட்டு கழக மைதானம், கலைநிதி விளையாட்டு கழகம், மாவடி இந்து இளையோர் விளையாட்டு கழகம், சண்டிலிப்பாய் இந்து இளையோர் விளையாட்டு கழகம், நீர்வேலி காமாட்சியம்பாள் விளையாட்டு கழகம், மட்டுவில் மோஹனதாஸ் விளையாட்டு கழகம், ஆவரங்கால் இந்து இளையோர் விளையாட்டு கழகம் மற்றும் வல்வெட்டித்துறை விளையாட்டு மைதானங்கள் என்பவற்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles