யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாத்தளை மாணவிக்கு அதி உயர் விருது

யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாத்தளை மாணவிக்கு அதி உயர் விருது


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35ம் பட்டமளிப்பு விழாவில் மாத்தளையைச் சேர்ந்த மாணவி முனியப்பன் துலாபாரணிக்கு அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளது.

சிரேஸ்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

துலாபாரணி, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் ஊடகவியல் திறமைச் சித்தி பெற்றுள்ளார்.
மாத்தளை மாவட்டத்தின் சுதுகங்கை என்னும் கிராமத்தைச் சேர்ந்த மாணவியே துலாபாரணி என்பது குறிப்பிடத்தக்கது.

தமது பெற்றோர் கூலித் தொழிலாளர்கள் எனவும், மிகுந்த வறுமைக்கு மத்தியில் தாம் கல்வியைத் தொடர்ந்து வருவதாக மாணவி துலாபாரணி குறிப்பிட்டுள்ளார்.

துலாபாரணி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை கற்கை நெறியை பூர்த்தி செய்து அதே பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமரா மற்றம் செய்முறைப் பயிற்சிகள் மீதான ஈர்ப்பே ஊடகக் கற்றையல் சிறந்து மிளர வேண்டுமென்ற உத்வேகத்தை தமக்குத் தந்தது என துலாபாரணி தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles