சம்பள விவகாரம் குறித்து ரகசியமாக பேசாதீங்க…!!!

சம்பள விவகாரம் குறித்து ரகசியமாக பேசாதீங்க…!!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தப் தொடர்பான பேச்சுவார்த்தை இரகசியமாக இடம்பெற கூடாது என ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் சண்முகம் திருச்செல்வம் வலியுறுத்தினார்.

ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் விடயம் தொடர்பான பேச்சிவார்த்தையினை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்கள் இரகசியமாக நடத்தாமல் மக்கள் மத்தியில் வெளிப்படையாக நடத்த வேண்டும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா என்பது அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டுமே தவிர சகல கொடுப்பனவுகளையும் உள்ளக்கிய சம்பளமாக இருக்ககூடாது.

2021ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு திட்டத்தில் பிரதமர் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபாய் வழங்கப்படுமென முன்மொழிந்தார். ஆனால் இதுவரையிலும் பெருந்தோட்ட நிறுவனங்கள் எவ்வித இணக்கபாட்டுக்கும் வரவில்லை.

தொழிலாளர்களுக்கு வழங்கபட உள்ள ஆயிரம் ரூபா சம்பளம் அடிப்படை சம்பளமாக வழங்கபடாவிட்டால் தோட்ட தொழிலாளர்களின் உரிமைக்காக வீதியில் இறங்கி போராட ஐக்கிய தொழிலாளர் ஒன்றியம் தயாராக உள்ளது.” – என்றார்.

administrator

Related Articles