ரபாடா ரெடி

ரபாடா ரெடி

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கங்கிசோ ரபடா இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாடவுள்ளார்.

ரபடா. ஐ.பி.எல் தொடர் முடிந்த பிறகு, சொந்த நாட்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடும் போது காயத்தால் வெளியேறினார்.

தற்போது காயம் குணமடைந்துள்ளதால் இலங்கை அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணியல் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை நடைப்பெற்று வரும் முதலாவது டெஸ்டில் இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை சற்று முன்னர் வரை 5 விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக தென்னாபிரிக்க முதல் இனிங்சில் 621 ஓட்டங்களையும், இலங்கை 396 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடதக்கது.

administrator

Related Articles