ராகலை – மாகுடுகலை தோட்டத்தில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளா?-இராணுவத்தின் பதில்

ராகலை – மாகுடுகலை தோட்டத்தில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளா?-இராணுவத்தின் பதில்

ராகலை – மாகுடுகலை தோட்டத்தில், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் எவ்வாறான கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என ஆராய வேண்டும் என இராணுவம் தெரிவித்துள்ளது.

ராகலை – மாகுடுகலை தோட்டத்தில், சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு, நுவரெலியா மாவட்ட தொழில் அலுவலகம், தோட்ட நிர்வாகத்திற்கு நேற்று (16) தெரியப்படுத்தியிருந்தது.

நுவரெலியா மாவட்ட தொழில் அலுவலகத்தினால், செரண்டிப் பெருந்தோட்ட தனியார் நிறுவனத்திற்கும், தோட்ட முகாமையாளருக்கும், நேற்று இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின் பிரதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும், மலையக மக்கள் முன்னணிக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் ஊடகப் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர், இராணுவத்திலிருந்து சட்டரீதியாக வெளியேறியவர்கள், தாம் விரும்பிய தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளதாக கூறினார்.
எனினும் அவர்கள் எந்த வகையில், எதற்காக அங்கு பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும் என இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இராணுவத்தை தோட்டத்தில் சேவையில் ஈடுபடுத்தியதைக் கண்டித்து மாகுடுகல தோட்ட மக்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles