றொரன்டோவில் தேசிய தின நிகழ்வுகள் ரத்து

றொரன்டோவில்  தேசிய தின நிகழ்வுகள் ரத்து


றொரன்டோவில் கனேடிய தேசிய தின நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

றொரன்டோவின் நகர மேயர் ஜோன் டோரி இந்த விடயம் தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கொவிட்-19 நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து செல்வதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நகர நிர்வாக எல்லைப் பகுதிகளுக்குள் வெளியிடங்களில் கனேடிய தெசிய தின நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி கிடையாது என அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு புதிய கொவிட் தொற்றாளியினாலும் குறைந்தபட்சம் 1.1 வீத அளவில் புதிய கொவிட் தொற்றாளிகள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

administrator

Related Articles