வட்டக்கச்சியில் இளம் குடும்பஸ்தரின் கொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

வட்டக்கச்சியில் இளம் குடும்பஸ்தரின் கொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

கிளிநொச்சியில் வட்டக்கச்சி பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் உயிரிழந்த  அருளம்பலம் துஷ்யந்தனின் கொலைக்கு நீதி வேண்டியும்,  அதன் தொடர்சியாக கடந்த  திங்கட்கிழமை காலை  இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள் மீதும்  தருமபுரம்  பொலிஸார் மேற்கொண்ட  தாக்குதலை  கண்டித்தும்  ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடு்கப்பட்டது. 

இன்று (17) காலை 9 மணிக்கு வட்டக்கச்சி  சந்தியிலிருந்து  நூற்றுக்கும் மேற்பட்டோர் உழவு இயந்திரங்களில் மு்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.

கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இறந்தவருக்கு நீதி கிடைக்கவில்லையென்றும், பொலிஸார் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

உழவு இயந்திரத்தில் வருகை தந்த ஆர்ப்பாட்ட குழுவினர், கிளிநொச்சி காக்கா கடை சந்தியிலிருந்து மாவட்ட செயலகம் வரை ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்தனர்.

தமது பிரதேசத்தில் காணப்படும் சட்டவிரோத மது விற்பனை, மற்றும் சட்டவிரோத போதை பொருள் விற்பனை ஆகியவற்றை தடுக்குமாறு கோசங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்சிறிமோகனுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்துரையாடியதுடன், பொலிஸ்மா அதிபர், பிரிதி பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்டோருக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.

இதன்போது தர்மபுரம் பொலிஸார் மீது மக்கள் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

administrator

Related Articles