வன்கூவர் மெட்ரோ “டிரான்ஸ் லிங்” சிஸ்டத்துக்குள் விஷமிகள் ஊடுருவல்!! கிரடிட் , டெபிட் கார்டுகள் பாவிக்க முடியாது!

வன்கூவர் மெட்ரோ “டிரான்ஸ் லிங்” சிஸ்டத்துக்குள் விஷமிகள் ஊடுருவல்!! கிரடிட் , டெபிட் கார்டுகள் பாவிக்க முடியாது!

கனடா நாட்டின் முக்கிய மாகணங்களில் ஒன்றான பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரதான நகரமான வன்கூவரில் மெட்ரோ போக்குவரத்து அதிகளவில் இடம்பெறுகிறது.

நாளந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில் மற்றும் பஸ் சேவைகளை பயன்படுத்துவார்கள்.

இதற்கான டிக்கெட்டுகளை வாங்கும் இயந்திரத்தின் சிஸ்டமான டிரான்ஸ் லிங்கிற்குள் Hacker’s ஊடுரு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் ஊடுருவிய விஷமிகள் பெருந்தொகை பணத்தை கப்பமாக கோரி இருக்கிறார்கள் இது தொடர்பான மூல பிரதியொன்று தங்களுக்கு கிடைக்க பெற்றதாக வன்கூவர் ஊடகமான 1130 கூறுகிறது.

அது மாத்திரமல்ல விஷமிகள் தனியான உரையாடலை மேற்கொள்ள மாநகரசபைக்கு இரகசிய லிங்கொன்றையும் அனுப்பி உள்ளது.

இது குறித்து டினான்ஸ் லிங் பிரிவின் பிரதம அதிகாரி கேவின் டெஸ்மன்ட் கருத்து தெரிவிக்கையில் .

தங்களின் கணனி தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதேபோன்று கடந்த ஒக்டோபர் மாதம் மொன்றீயல் மெட்ரோ சிஸ்டத்திற்கு ஊடுருவிய விஷமிகள் சுமார் 2. 8 மில்லியன் கனேடிய டொலர்களை கப்பமாக கேட்டு இருந்தார்கள்.

அந்த குழுவிற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாமா என்ற சந்தேகம் எழுகின்றதாக கூறப்படுகிறது.

administrator

Related Articles