வலி வடக்கு பிரதேச சபைத்தலைவருக்கு ஆதரவாக சமூக போராளிகள்!!

வலி வடக்கு பிரதேச சபைத்தலைவருக்கு ஆதரவாக சமூக போராளிகள்!!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைவர் தி.நிரோஷ் கைது செய்யப்படலாம் என யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

“பிரதேச சபையின் அதிகாரத்தினை நிலைநிறுத்தியமைக்காக என்னை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நடப்பதாக அறிய முடிகின்றது” என நிரோஷ் தெரிவித்திருக்கின்றார்.

வலி வடக்கு பிரதேச சபை முன்பாக கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் பெருமளவுக்குக் கூடியிருப்பதாகவும், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் தெரிகின்றது..

இவரை கைது செய்ய கூடாது என சமூக வலைத்தளங்களில் பலர் ஆதரவு தெரிவித்து பதிவுகளை செய்து வருகின்றனர்.

administrator

Related Articles