வழி தவறும் இளைஞர்களை விளையாட்டினாலேயே முன்னேற்ற முடியும் – அங்கஜன் எம்.பி உரை!!

வழி தவறும் இளைஞர்களை விளையாட்டினாலேயே முன்னேற்ற முடியும் – அங்கஜன் எம்.பி உரை!!

வழி தவறும் இளைஞர்களை விளையாட்டினாலேயே முன்னேற்ற முடியும் – “கிராமத்துக்கு ஒரு மைதானம்” தேசிய ரீதியான அங்குரார்ப்பாண நிகழ்வில் அங்கஜன் எம்.பி உரையாற்றி இருக்கிறார்.

ஜனாதிபதி கோட்டபாயாராஜாபக்‌ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் பிரதமர் மகிந்தராஜபக்க்ஷ அவர்களின் ஆலோசனையில் விளையாட்டுதுறை, இளைஞர் விவகார அமைச்சு மற்றும் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயற்திட்டம் தேசிய ரீதியில் இன்று (02) நாடு பூராகவுமுள்ள 332 பிரதேச செயலகங்களில் கீழ் உள்ள கிராமங்களில் மைதானம் அமைக்கும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

யாழ் மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களிலும் கீழ் உள்ள கிராமங்களில் தலா ஒரு மைதானம் அமைக்கும் செயற்திட்டத்தின் அங்குரார்பண நிகழ்வு யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றது.


தேசிய ரீதியாக காலை 10.25 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள “விண்மீன் விளையாட்டுக்கழக மைதானம்” அமைக்கும் நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாநகர முதல்வர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ் மாவடலட அரசாங்க அதிபர் (காணி), யாழ் மாநகர ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலகர், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், அரச உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், யுவதிகள், பொது மக்கள் என பலர் Covid – 19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டனர்.

administrator

Related Articles