வாடகைக்கு வழங்கும் போது கறுப்பினத்தவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறை

வாடகைக்கு வழங்கும் போது கறுப்பினத்தவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறை

வீடுகளை வாடகைக்கு வழங்கும் போது கறுப்பினத்தவர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக நல்ல பொருளாதார நிலைமையை உடைய கறுப்பினத்தவர்களுக்கு கூட வீடுகள் வாடகைக்கு வழங்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வீட்டு உரிமையாளர்கள் இன ரீதியான குரோத அடிப்படையில் விடுகளை வாடகைக்கு விடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், கனடாவில் இன மத அடிப்படையில் வீடுகளை வாடகைக்கு விடுவது சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் தொடர்ச்சியாக இவ்வாறு கறுப்பினத்தவர்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

administrator

Related Articles