வாழைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளருக்கு மனநோய் – இரா.சணக்கியன் எம்பி

வாழைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளருக்கு மனநோய் – இரா.சணக்கியன் எம்பி

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளருக்கு தொடர்ச்சியாக வரக்கூடிய நோயுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் கூறினார்.

என்னைப் பொறுத்த வரையில் இவருக்கு மனநோய் என்று தான் பார்க்க வேண்டும்.

ஏனெனில், இவரின் செயற்பாடு மனநோயாளி போன்று காணப்படுகின்றது என தமிழ் தேசியk கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

வாழைச்சேனைப் பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டத்தின் போது தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு சபை உறுப்பினர்கள் மற்றும் திடீரென மயங்கி விழுந்த சபையின் செயலாளரையும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2008ம் ஆண்டுக்கு முன்னர் எவ்வாறு மக்களை அச்சுறுத்தி அரசியல் செய்தார்களோ, அதே போன்று, மறு உருவம் எடுத்துள்ளதை இன்றைய வாழைச்சேனைப் பிரதேச சபை வரவு-செலவுத் திட்டதின் போது இடம்பெற்ற சம்பவம் நிரூபித்துள்ளது.

தமது வரவு-செலவுத்திட்டத்திற்கு ஆதரவில்லை என்பதால், அதைத்தடுத்து நிறுத்தத் தான் போலியாக நடித்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதுடன், அவருக்கெதிராக இருந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களை பொலிஸாரைப் பயன்படுத்தி மிகவும் தவறான முறையில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் பதவி, மண் கொள்ளைக் கும்பல்கள்காரர்களின் ஆதரவையும் பயன்படுத்தி, சிறையில் வைத்து இன்றைய தினம் கூட்டத்தினை சரியான முறையில் ஏற்பாடு செய்யாது, சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனைப் பிரதேச சபையில் இடம்பெறும் ஊழல்களுக்கெதிராக கட்சி, மதம், இனம் என்பவற்றுக்கப்பால் குரல் கொடுத்த சபை உறுப்பினர்களை எதிர்த்து வந்த நிலையில், வரவு செலவுத்திட்டம் தோல்வியுறும் என்ற நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரை வரவழைத்து பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி தன்னிச்சையாக அவர்களது உறுப்பினர்களை உள்ளே எடுத்து எதோவொரு வகையில் முடித்துள்ளார்கள்.

கிழக்கு மாகாண ஆளுனர், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் இதனை உடனடியாக கவனத்திற்கொள்ளவும்.

ஏனெனில், இது கண்டிக்கப்பட வேண்டிய வியடமாகும். சபை உறுப்பினர்களில் வீடுகளுக்கு சென்று உறவினர்களை அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.

அத்தோடு, இன்றைய சம்பவத்தில் இரண்டு பெண் உறுப்பினர்கள் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, சபையின் செயலாளரும் மயங்கி விழுந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் போது, சபையின் செயலாளர் என்னிடம் எனக்கு உடனடியாக இடமாற்றம் செய்து தருமாறும் தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித் மற்றும் கட்சித் தலைவரின் அச்சுறுத்தல்களை என்னால் முகங்கொடுக்க முடியாது.

ஆகவே, எனக்கு இடமாற்றம் பெற்றுத்தருமாறு கண்ணீரோடு என்னிடம் உருக்கமாக கேட்டுக் கொண்டார்.

தாக்குதலுக்கு இலக்காகிய இரண்டு பெண் உறுப்பினர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், இவர்களை மட்டு போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எங்களை வைத்தியசாலையில் வைத்தும் ஊசிகள் போன்று உணவில் நஞ்சு வைத்து கொலை செய்யக்கூடிய அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு, பிரதித்தவிசாளரின் மனைவியை வீட்டிற்குச் சென்று சபை உறுப்பினர் சுதர்சன் அச்சுறுத்தியதாகவும் என்னிடம் தெரிவித்தார்.

வாழைச்சேனைப் பிரதேச சபை தவிசாளருக்கு தொடர்ச்சியாக வரக்கூடிய நோயுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் கூறினார்.

என்னைப் பொறுத்தவரையில் இவருக்கு மனநோய் என்று தான் பார்க்க வேண்டும். ஏனெனில், இவரின் செயற்பாடு மனநோயாளி போன்று காணப்படுகின்றது என்றார்.

வாழைச்சேனைப் பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இரண்டு சபை உறுப்பினர் விளக்கமறியிலில் உள்ள நிலையில் எதிர்தரப்பினர் சபையை நடாத்தக் கூடாது என்று சபை மண்டப நுழைவாயிலை மூடி போராட்டம் நடாத்தினார்கள்.

இதன் நிமிர்த்தம் பல்வேறு குழப்ப நிலைகளுக்கு மத்தியில் ஆளும் கட்சி உறப்பினர்கள் சபை மண்டபத்திற்கு தவிசாளரை கொண்டு செல்லும் போது எதிர்தரப்பு உறுப்பினர்கள் தடுக்க முற்பட்ட வேளையில் இரண்டு உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாக தாக்குதலுக்கு இலக்கான பெண் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதில் வாழைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்களான திருமதி.பி.லெட்சுமி, எம்.எல்.நபீரா மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் திருமதி.ப.லிங்கேஸ்வரன் திடீரென மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் எஸ்.சரவணபவன் மற்றும் வாழைச்செனை சபை உறுப்பினர்கள் சகிதம் சென்று பார்வையிட்டதுடன், இவர்களை உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வைத்திய அத்தியட்சகரிடம் கேட்டுக் கொண்டார்.

அத்தோடு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று குறித்த இரண்டு சபை உறுப்பினர்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அத்தோடு எட்டு சபை உறுப்பினர்களால் பொலிஸில் முறைப்பாடுகளும் போடப்பட்டது.

administrator

Related Articles