வாஸின் திடிர் விலகலுக்கு இதுதான் காரணம்: அம்பலமாகியது உண்மை

வாஸின் திடிர் விலகலுக்கு இதுதான் காரணம்: அம்பலமாகியது உண்மை

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தனது தாழ்மையான கோரிக்கையை கூட நிராகரித்தாக பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகிய சமிந்த வாஸ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆகவே நீதி வெல்லும் எனவும் வாஸ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
எனினும் சம்பளம் தொடர்பாக எழுந்த பிரச்சினையே சமிந்த வாஸ் பதவிவிலகியமைக்கு காரணம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள கிரிக்கெட் குழாமில் இருந்து வாஸ் நேற்று (22) விலகுவதாக அறிவித்தமை குறிப்பிடதக்கது.

இதேவேளை இன்று (23) அதிகாலை 3.35 அளவில் இலங்கை கிரிக்கெட் அணி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக மேற்கிந்திய தீவுகளை நோக்கி சென்றுள்ளது.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இலங்கை வீரர்கள் மேற்கிந்திய தீவுகளை நோக்கி சென்றுள்ளனர்.

administrator

Related Articles