விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் நித்யா மேனன்

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் நித்யா மேனன்

மலையாளத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள்.

தமிழில் முன்னணி நாயகியான வலம் வந்தாலும், இதர மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் விஜய் சேதுபதி. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘சைரா’, மலையாளத்தில் ஜெயராமுடன் ‘மார்க்கோனி மத்தாய்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தற்போது தெலுங்கில் ‘உபெனா’, இந்தியில் ஆமிர்கானுடன் ‘லால் சிங் சட்டா’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மீண்டும் புதிய மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி.

இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளார். நாயகியாக நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்து வி.எஸ் இயக்கவுள்ள இந்தப் படத்தை ஆண்டோ ஜோசப் தயாரிக்கவுள்ளார்.

கடந்தாண்டே விஜய் சேதுபதி – நித்யா மேனன் இருவருமே இந்தக் கதையைக் கேட்டு நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இதன் படப்பிடிப்புக்கு திட்டமிட்டு இருந்த போது தான் கரோனா அச்சுறுத்தல் தொடங்கிவிட்டது. ஆகையால் கரோனா அச்சுறுத்தல் முழுமையாக முடிவுற்றவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

administrator

Related Articles