விமர்சனங்களை தாண்டி கடமையாற்ற வேண்டும்

விமர்சனங்களை தாண்டி கடமையாற்ற வேண்டும்

2021 ஆம் ஆண்டுக்கான சத்தியப் பிரமாண உறுதியுரை  நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாண உறுதியுரை எடுத்து தங்கள் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (01) பிரதேச செயலக முன்றலில் இடம் பெற்றது.

இந் நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலாத்தில்  கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி தேசிய கொடியை ஏற்றி ஆரம்பித்து வைத்தார். இதன் போது செயலகத்தில் கடமையாற்றும்  சகல உத்தியோகத்தர்களும்  தங்களுக்கான பொறுப்புக்களையும் கடமைகளையும் சரிவர செய்து  பொதுமக்களை திருப்திப்படுத்துவோம் என உறுதி பிரமானம் செய்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர்  எம்.எச்.முகம்மட் கனி…

விமர்சனங்கள் வருவது புதிதல்ல அவற்றை செவி சாய்க்காது அர்ப்பணிப்புடன் சேவையற்றுவது எமது பாரிய பொறுப்பு அதற்காக எமக்கு பொது மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆகவே விமர்சனங்களை தாண்டி கடமையாற்ற வேண்டும்  என தெரிவித்தார் இந் நிகழ்வில் மறைந்த படை வீரர்கள், மற்றும் பெரியோர்களுகாகாக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டன ஞாபகார்த்தமாக கிண்ணியா பிரதேச செயலக வளாகத்தில் மரக்கன்று  செயலாளரினால்  நடப்பட்டது

administrator

Related Articles