விமலுக்கு தகுந்த பாடத்தை கற்று கொடுப்போம் ! மனோவிற்கு ஆதரவாக முன்னாள் பா.உ யோகராஜன்!!

விமலுக்கு தகுந்த பாடத்தை கற்று கொடுப்போம் ! மனோவிற்கு ஆதரவாக முன்னாள் பா.உ யோகராஜன்!!

பாரளுமன்றத்தில் விமவ் வீரவன்ச பேசிய முறைக்கு முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்

கொழும்பு மக்களின் நிலைமை குறித்து கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இன்று பாரளுமன்றத்தில் பேசினார்.

அந்நேரம் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விமல் வீரவன்ச 5000 ரூபா ஒரு வார செலவிற்கு கொடுக்கப்படவில்லை என்று கூறியதுடன் பாரளுமன்ற உறுப்பினரான மனோ கணேசனை கீழ்தரமாகவும் பேசினார்

இதையடுத்து பாரளுமன்ற உறுப்பினரான மனோ கணேசன் முகநூலில் பதிவொன்றை பதிவு செய்தார்

விமல் வீரவன்சவுக்கு இது கெட்ட காலம். என்னை முட்டாள் என்ற இந்த அடிமுட்டாளுக்கு, யார் முட்டாள் என்பதை அடுத்த வாரம் பாராளுமன்றில் நான் காட்டுவேன்.

விமல் வீரவன்ச கூறுகிறார்
5000/= ரூபா தருவது ஒரு வாரத்தில் சாப்பிட்டு முடிக்க இல்லையாம். அது இரண்டு வார காலத்திற்காம். அப்படியானால் சராசரி நான்கு பேர் கொண்ட குடும்பம், ஒரு நாளைக்கு மூன்று வேளை என்றால், 12 வேளை என, 14 நாட்களில், 168 வேளை சாப்பிட வேண்டும். இதை 5000/= ரூபாயில் முடிக்க வேண்டுமாம்.

இதற்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரான ஆர்.யோகராஜன்

” மனோ நீங்கள் செய்வது சரி. நீங்கள் முன்னெடுக்கும் விடயம் பாரட்ட்டதக்கது.விமல் ஒரு முட்டாள் அவரை பற்றி கவலைப்பட வேண்டும். அவருக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் நாங்கள் உங்களோடு இருப்போம்” என கூறியுள்ளார்

administrator

Related Articles