விமல் வீரவன்ஸ பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!! சிவநேசன் அறிக்கை

விமல் வீரவன்ஸ பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!! சிவநேசன் அறிக்கை

இனவாத குழுக்களின் தலைவர் விமல் வீரவன்ச தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகனேசனிடம் மன்னிப்பு கோர வேண்டும்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன் தெரிவிப்பு

நேற்றைய தினம் மக்கள் சபையில் வைத்து (பாராளுமன்றத்தில் )மக்களுக்கு நடந்த அநியாயங்களை அதாவது தனிமை படுத்தபட்ட மக்கள் பட்டினியை தாங்க முடியாமல் வீதிக்கு இறங்கியதை கௌரவ தலைவர் மனோகனேசன் சபையில் சுட்டிக்காட்டி போது அதற்கான பதிலை வழங்க முடியாத இனவாத குழுக்களின் தலைவன் விமல் வீரவன்ச தலைவர் மனோகனேசனை தகாதா வார்த்தையில் எச்சரித்தது இந்த நாட்டில் நடக்கும் இனவாதத்தையும் அடக்குமுறையையும் எடுத்து காட்டபடுகின்றது

இவரின் பேச்சு இந்த நாட்டில் நாங்கள் கொடுப்பதை மாத்திரமே பெற்று கொள்ளவேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது

மனோகனேசனுக்கு விடுக்கும் எச்சரிக்கையானது அனைத்து தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினருக்குமானதே அனைத்து சிறுபான்மை மக்களுக்கும்மானதே

எனவே விமல் வீரவன்ச அவர்கள் தலைவர் மனோகனேசனிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்
இல்லை என்றால் அனைத்து சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து அவருக்கு மாபெரும் மக்கள் சபையான பாராளுமன்றத்தில் தக்க பதிலடி வழங்கவேண்டும் என கேட்டு கொள்கிறேன்
“வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும் ” என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

administrator

Related Articles