வியாஸ்காந்த் முன்னாள் உள்ள சவால்

வியாஸ்காந்த் முன்னாள் உள்ள சவால்

கிரிக்கெட் விளையாட்டுக்கான நவீன வசதிகள் கிடைத்தால் யாழ்.மாவட்டத்தில் வியாஸ்காந் போன்ற வீரர்களை உலகுக்கு அறிமுகப்படுத்த முடியும் என யாழ்.மத்திய கல்லூரி அதிபர் தெரிவித்துள்ளளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முக்கியமாக கடினப்பந்து பயிற்சிகளுக்கான டேப் (Turf) உள்ளிட்ட மைதான வசதிகள் கிடைத்தால் இன்னும் பல வியாஸ்காந்களை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அணிக்கு அர்ப்பணம் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது LPL தொடரில் ஜப்னா ஸ்டேலியண்ஸ் (Jaffna Stallions) அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய வியாஸ்காந் கருத்து தெரிவிக்கையில்…

“எனக்கு LPL தொடர் உள்ளிட்ட தொடர்களில் பந்துவீச வாய்ப்பு கிடைத்தது. அப்போது சிங்கள மொழியை பேச முடியாமல் இருந்தமையே எனக்கு இருந்த முதல் சவால்.எமக்கு டேப் (Turf) வசதிகள் இல்லை. இந்த வசதிகள் கிடைத்தால் மேலும் சாதிக்கலாம்”

LPL தொடரில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ்சின் விக்கெட்டை விஜயகாந் வியாஸ்காந்த் வீழ்த்தி சாதித்தமை குறிப்பிடதக்கது.

administrator

Related Articles