“வியாஸ்காந்த்” வாழ்வில் மறக்க முடியாத நபர் ‘சொஹிப் மலிக்’! ( video)

“வியாஸ்காந்த்” வாழ்வில் மறக்க முடியாத நபர்  ‘சொஹிப் மலிக்’! ( video)

2 ஓவர்கள் 4 பந்துகளை வீசி 23 ஓட்டங்களை கொடுத்து விட்டாரே .. இனி அடுத்த ஓவரை தம்பி வியாஸ்காந்துக்கு கொடுப்பாங்களோ இல்லையோ என பலர் யோசித்து கொண்டிருந்த கட்டம்.

இலங்கை அணியின் இரண்டு கப்டன்கள் ஆடுகளத்தில் கொழும்பு கிங்ஸ் அணி சார்பாக துடுப்பெடுத்தாடி கொண்டிருந்தார்கள்.இந்த ஜாம்வன்களுக்கு 18 வயது ” யாழ் புயல் ” வியாஸ்காந்து பந்து வீசுகிறார்.

தனது 3 வது ஓவரின் 4 ஆம் பந்தை வியாஸ் காந் விசுகிறார் , அஞ்சலோ மெத்தியூஸ் அசால்டாக ஒரு பவுண்டரி அடிக்கிறார். ஆனால் வியாஸ்காந்தின் முகத்தில் பயமிருக்கவில்லை. அடுத்து எப்படி வலைக்குள் சிக்க வைக்கலாம் என உள்ளத்தில் திட்டம் தீட்டினார் .

தனது எல்லையில் இருந்து பந்து அழகாக அஞசலோவிற்கு ஸ்பீன் செய்து விடுகிறார்.அவர் இதை சிக்ஸருக்கு அடிப்போம் என நினைத்து ஓங்கி அடித்தார்.

அந்த பந்து பவுண்டரி லைனில் நின்ற சொயிப் மலிக் கைக்கு வந்தது. ஆனால் பந்து துரதிர்ஷ்டவசமாக கையில் இருந்து வெளியேறி பவுண்டரி லைனை கடக்க போனது உடனே அவர் ஹீரோ போல பந்தை. தட்டி விடுகிறார். அது மீண்டும் பவுண்டரி லைன விட்டு மேலே உயர போனது. மலிக் அதனை அழகாக பிடித்து வியாயஸ் காந்தின் முகத்தில் புன்னகையை பார்த்தார்.

இந்த தருணம் எம்மை மட்டுமல்ல உலக ரசிகர்களுக்கே மலிக்கின் விளையாட்டு அர்ப்பணிப்பு விளங்கி இருக்கும்.

இந்த போட்டியில் யாழ் ஸ்டேர்லிங் அணி தோல்வியை தழுவியது .

கொழும்பி கிங்ஸ் அணி முதலி்ல் துடுப்பெடுத்தாடிய யாழ் அணியை 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது.

இதில் வனிந்து ஹசரங்க 41 ஓட்டங்களை பெற்றார்.

இந்த ஆடுகளத்தில் வெல்ல வேண்டுமானால் ஆக குறைந்தது 180 ஓட்டங்களையாவது பெற்றி இருக்க வேண்டும் என யாழ் அணியின் தலைவர் திசிர பெரேரரா கூறினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இதில் சந்திமால் ஆட்டமிழக்கால் 68 ஓட்டங்களை பெற்று ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

பந்துவீச்சில் வியஸ்காந்த் 4 ஓவர்களில் 29 ஓட்டங்களை கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

ஹசரங்க 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

administrator

Related Articles