விவகாரத்துச் சட்டத்தில் திருத்தம்

விவகாரத்துச் சட்டத்தில் திருத்தம்


கனடாவில் விவகாரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப வன்முறைகள் மற்றும் பிள்ளைகளை பராமரித்தல் ஆகியனவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விவகாரத்துச் சட்டத்தில் குடும்ப வன்முறை என்னும் ஓர் சரத்தினை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளில் முதல் தடவையாக இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடும்ப வன்முறைகள் பாதிக்கப்படுவோரையும், சாட்சியாளர்களையும் மிக மோசமாக பாதிக்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே குடும்ப வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் விவகாரத்துச் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.

administrator

Related Articles